திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : ஞாயிறு, 25 ஜூன் 2017 (23:46 IST)

2G ஊழல்ன்னா என்ன? இந்த வசனம் மறந்துருச்சா விஜய்-முருகதாஸ்?

அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்த வரும் 'மெர்சல்' படத்தை அடுத்து மீண்டும் துப்பாக்கி, கத்தி கூட்டணியான விஜய்-முருகதாஸ் இணைவது உறுதியாகிவிட்டது. இந்த படத்தை ஒரு பெரிய இடைவெளிக்கு பின்னர் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக தெரிகிறது.



 


இந்த நிலையில் விஜய்-முருகதாஸ் இணைந்த 'கத்தி' படத்தில் ஒரு வசனம் வரும். 2ஜி அப்படீங்கிறது என்னது? அது காற்று. கண்ணுக்குத் தெரியாத காற்றிலேயே ஊழல் செய்கிறார்கள். இந்த வசனம் திமுகவுக்கு எதிரான வசனம் என்று கூறப்பட்டது.

ஆனால் தற்போது 2G ஊழல் செய்த கட்சிக்கு நெருக்கமானவர்கள் தயாரிக்கும் படத்தில் விஜய்-முருகதாஸ் இணையவுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த ஒருவர், '2G ஊழல் குறித்து அவ்வளவு தைரியமாக ஒரு வசனம் வைத்துவிட்டு, இன்று 2G ஊழல் செய்தவர்களிடமே அவர்கள் சரண அடைந்துவிட்டார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்