வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 24 டிசம்பர் 2020 (09:16 IST)

உங்களுக்கு இன்னும் கெட்ட வார்த்தைக் கற்றுத்தருகிறேன் – விக்னேஷ் சிவன் டிவீட்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் பாலிவுட் நடிகை கல்கி கோச்சலினிடம் டிவிட்டரில் உங்களுக்கு இன்னும் நிறைய கெட்ட வார்த்தைக் கற்றுத் தருகிறேன் எனக் கூறியுள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான லவ் பண்ணா உட்ருர்ணும் என்ற ஆந்தாலஜி திரைப்படம் ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்றது. அதற்கு முக்கியக் காரணமாக அந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சில கெட்ட வார்த்தைகள் அமைந்திருந்தன. படத்தில் தமிழ் தெரியாத பெண்ணாக நடித்திருந்த கல்கி கோச்சலின் பேசிய சில கெட்டவார்த்தைகள் ரசிகர்களிடையே கவனிப்பைப் பெற்றன.

இந்நிலையில் அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு கல்கி கோச்சலின் டிவிட்டரில் ‘நன்றி விக்னேஷ் சிவன். எனக்கு சில கெட்டவார்த்தைகளைக் கற்றுக்கொடுத்ததற்கு,மற்றும் பல நல்ல இலக்கியப் பாடல்களை சொல்லிக் கொடுத்ததற்கும், உங்கள் கற்பனைத் திறனை மதிக்கிறேன்’ எனக் கூற அவருக்குப் பதிலளித்த விக்னேஷ் சிவன் ‘இன்னும் நிறைய கெட்ட வார்த்தைகளை அடுத்த முறை சந்திக்கும் போது பேசுவோம். கவிதைகள் குறித்தும் பேசுவோம். சில புத்தகங்களையும் தருகிறேன்’ எனக் கூறியுள்ளார். இருவரின் இந்த டிவிட்டர் உரையாடல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.