காமெடி நடிகர் பாலாவை பாராட்டிய விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் காமெடி நடிகர் பாலாவை பாராட்டியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருகிறார்.
இவர் ஈரோடு மாவட்டம் கடம்பூர் அடுத்த குன்றி உள்ளிட்ட 18 கிராம மக்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டி, கடம்பூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் சத்தியமங்கலத்திற்கும் சென்று வருகின்றனர்.
இதனால் அவசர உதவி காலத்தில் மக்களின் மருத்துவ சிகிச்சைக்காக நகைச்சுவை நடிகர் பாலா ரூ. 5 லட்சம் மதிப்பிலான இலவச ஆம்புலன்ஸ்ஸை தன் சொந்த நிதியில் வாங்கிக் கொடுத்து, '' நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன் தான்..என் அப்பா பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கிறார், அம்மா வீட்டில் இருக்கிறார்.... நாம் செய்யும் உதவி கஷ்ப்படுகிறவர்களுக்கு போய்ச் சேரனும்... மக்களுக்கு நன்றி இனி அங்குள்ள 8 ஆயிரம் உயிர்களும் பாதுகாப்பாக இருக்கும்'' என்று கூறியிருந்தார்.
இதற்கான நிகழ்ச்சி நேற்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட கண்காணிப்பாளார் ஜவஹர் ஆம்புலன்ஸை ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் நடிகர் பாலாவை பாராட்டி தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.