ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (16:31 IST)

தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு...

பெருந்துரை அருகே தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த 11 மாதக் குழந்தை விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துரையை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையம் தாய் நகர் பகுதியில் வசிப்பவர் சதீஸ்குமார்.  இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டைலராகப் பணியாற்றி வருகிறார்.

 இவரது மனைவி நாகமணி. இத்தம்பதியரின் மகன்கள் ஜிஷ்ணு(8), ஆகாஷ் (11 மாதம்).
இந்த  நிலையில், கடந்த 10 ஆம் தேதி அன்று, மூத்த மகன் ஜிஷ்ணுவை டியூசனில் இருந்து அழைத்து வர நாகமணி சென்றுள்ளார். அப்போது, சதீஸ்குமார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது குழந்தை ஆகாஷ் தவழ்ந்து சென்று அங்கிருந்த 20 லிட்டர் கொள்ளவுள்ள வாளி தண்ணீருக்குள் விழுந்துவிட்டான்.

நாகமணி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, குழந்தை நீரில் இறந்துகிடப்பதை பார்த்து அதிர்சியடைந்தார். பின்னர், குழந்தையை அரு சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்ரனர். அக்குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து, ஆகாஷின் உடலை அருகேயுள்ள சுடுகாட்டில் குழிதோண்டி புதைத்துள்ளனர் அவரது பெற்றோர்.

இதுபற்றி தகவலறிந்த போலீஸார்,  ஆகாஷின் உடலைப் புதைத்த இடத்தில் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.