விக்னேஷ் சிவன் தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு!

Last Modified புதன், 17 பிப்ரவரி 2021 (09:06 IST)

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.

இயக்குனராக அறியப்பட்ட நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இப்போது தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் உருமாறியுள்ளார். தனது ரௌடி பிக்சர்ஸ் மூலமாக ராக்கி, கூழாங்கல் மற்றும் விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய படங்களை வாங்கியுள்ளார்.

இது மட்டுமில்லாமல் காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் நெற்றிக்கண் ஆகிய படங்களை தயாரித்து வரும் அவர் இப்போது வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் எனும் படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் வினாயக் இயக்க உள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :