நடிகையின் 6 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்தவர் கைது!

Last Modified புதன், 17 பிப்ரவரி 2021 (08:50 IST)

பழம்பெரும் நடிகையான வாணிஸ்ரீ தன்னுடைய நிலத்தை அபகரித்து விட்டதாக சொல்லப்பட்ட புகாரை அடுத்து சம்மந்தப்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பழம்பெரும் நடிகையான வாணிஸ்ரீ 1970 களில் தன்னுடைய வாணிஸ்ரீ எண்டர்பிரைசஸ் என்ற கார் பேட்டரி நிறுவனத்துக்காக அமைந்தகரை அருகே நிலம் வாங்கியுள்ளார். அந்த நிலத்தின் இன்றைய மதிப்பு 6 கோடி ரூபாய். ஆனால் அதை சிலர் அபகரித்துவிட்டதாக அவர் போலீஸில் புகாரளித்துள்ளார்.

இதையடுத்து அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்பவரைப் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :