செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 26 பிப்ரவரி 2022 (16:49 IST)

குஜராத் சினிமாவில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா!

இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா உடன் இணைந்து உருவாக்கிய ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் பல தமிழ் திரைப்படங்களை தயாரித்து வருகிறார் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் குஜராத்தி சினிமா ஒன்று தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
தேசிய விருது வென்ற மணிஷ் சைனி என்பவரின் இயக்கத்தில் மல்ஹர் தக்கார் மற்றும் மோனல் கஜார் நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படத்தை விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து குஜராத்தி சினிமாவிலும் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் எண்ட்ரி ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது