ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 24 அக்டோபர் 2022 (18:10 IST)

இரட்டை குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன் - நயன்தாரா

wiki nayan
இரட்டை குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன் - நயன்தாரா
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இரட்டை குழந்தைகளுடன் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதிகளுக்கு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் தங்களுடைய இரட்டை குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டே விக்னேஷ் சிவன் - நயன்தாரா ரசிகர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களை கூறிய வீடியோ வெளியாகியுள்ளது
 
விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இரட்டை குழந்தைகள் குறித்து சர்ச்சைகள் எழுந்து வந்த போதிலும் அந்த சர்ச்சைகளையும் தாண்டி இந்த தம்பதிகள் சந்தோஷத்துடன் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran