செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 9 ஜூன் 2022 (12:12 IST)

விக்கி - நயன் திருமணம் : 1 லட்சம் பேருக்கு கல்யாண விருந்து!!

விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணத்தை முன்னிட்டு 1 லட்சம் பேருக்கு இன்று பிற்பகல் கல்யாண விருந்து வழங்கப்பட உள்ளது. 

 
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் இன்று நடைபெற உள்ளது. மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெறும் இந்த திருமணத்திற்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த திருமணத்தில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு செல்போன் அனுமதி கிடையாது என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
 
இந்நிலையில் இன்று திருமணத்தில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைத்தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள தகவலில் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் பேருக்கு இன்று பிற்பகல் கல்யாண விருந்து வழங்கப்பட உள்ளது என தெரியவந்துள்ளது. 
 
ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லங்கள், திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் இந்த கல்யாண விருந்தை வழங்க நட்சத்திர தம்பதிகள் ஏற்பாடு செய்துள்ளனர் என தெரிகிறது.