பத்து தல படத்துக்கு செம டஃப் கொடுக்கும் விடுதலை!
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. ரசிகர்கள் மட்டும் இல்லாமல் திரையுலகைச் சேர்ந்தவர்களும் கூட பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். படமும் கடந்த சில நாட்களாக அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வசூலும் நல்ல நிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்துக்கு ஒரு நாள் முன்பு வெளியான சிம்புவின் பத்து தல கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் முதல் நாள் வசூல் 6 கோடி ரூபாய் அளவுக்கு இருந்தது என்று சொல்லப்பட்டது. ஆனால் விடுதலை ரிலீஸ் ஆன பின்னர் பத்து தல படத்துக்கு திரைகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், வசூலிலும் விடுதலை பத்து தல படத்துக்கு கடுமையான போட்டியாக அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.