இழுத்துக் கொண்டே செல்லும் வேட்டையன் ஷூட்டிங்…. அப்செட்டில் ரஜினி!
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.
படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் தென் தமிழ்நாடு, மும்பை மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டன. இப்போது விறுவிறுப்பாக இறுதிக் கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ஏப்ரல் மாதத்தோடு மொத்த ஷூட்டிங் நிறைவடையும் என சொல்லப்பட்டது. அதனால் ரஜினி அடுத்த் மாதம் முதல் லோகேஷ் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளலாம் என திட்டமிட்டிருந்தாராம்.
ஆனால் வேட்டையன் ஷூட்டிங் இப்போது அடுத்த மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாம். இதனால் படக்குழு மீது ரஜினி கொஞ்சம் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.