1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 22 ஏப்ரல் 2024 (07:29 IST)

தலைவர் 171 படத்தின் டைட்டில் ‘டிஸ்கோ’ வா… எதிர்பார்ப்பை ஏற்படுத்திய லோகேஷ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

இந்த படம் 2013 ஆம் ஆண்டு வெளியான தி பர்ஜ் என்ற படத்தின் ஒரு சிறு பகுதியை தழுவிதான் லோகேஷ் இந்த படத்துக்கான திரைக்கதையை உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. ஜூன் மாதத்தில் ஷூட் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து இன்று மாலை இந்த படத்தின் டைட்டில் ரிவீல் டீசர் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்துக்கு டிஸ்கோ என பெயர் வைக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்துவது போல படம் பற்றிய ஒரு பதில் “நாளை முதல் டிஸ்கோ” என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதிவிட்டுள்ளார்.