செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By SInoj
Last Modified: புதன், 10 ஏப்ரல் 2024 (17:24 IST)

விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வெங்கட்பிரபு!

தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர் வெங்கட்பிரபு. இவர் தற்போது விஜய், சினேகா, பிரசாந்த், மோகன் ஆகியோர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் தி கோட். இப்படத்திற்கு யுவன் இசையமைக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
 
இப்படத்தின் ஷூட்டிங் கேரளா, சென்னை, உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்ற நிலையில், தற்போது தி கோட் பட ஷூட்டிங் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது.
 
விஜய் விளையாடி மகிழிவும் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது.
 
இந்த நிலையில், இப்படத்தில் வெங்கட்பிரபு நடிப்பதாக தகவல் வெளியாகிறது.
 
ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் படத்திலும், 2006 ஆம் ஆண்டு வெளியான சிவகாசி படத்திலும் வெங்கட்பிரபு நடித்திருந்தார்.
 
இந்த இலையில், சில ஆண்டுகள் கழித்து வெங்கட்பிரபு விஜய் படத்தில் நடித்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.