புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By SInoj
Last Modified: செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (22:37 IST)

பிரதீப் ரங்கநாதனின் புதிய பட அப்டேட்!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தை   புதுமுக இயக்குனர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
அதாவது, கீர்த்தி ஈஸ்வரன் என்ற உதவி இயக்குனர் மைத்ரி மூவி மேக்கர்ஸை அணுகியுள்ளார். அவர் கதை சொன்ன உடனே தயாரிப்பு தரப்பிற்கு  பிடித்துப் போனது.

எனவே அடுத்து பிரதீப் ரங்கநாதனை அணுகி கதை சொன்னபோது அவருக்கும் கதை பிடித்துப்போனதாம். எனவே அனைவரும் ஒருமனதோடு படத்தை தொடங்க திட்டமிட்டு, வரும் செப்டம்பர் மாதம் இப்பட ஷூட்டிங் நடக்கும் என கூறப்படுகிறது.
 
பிரதீப் ரங்கநாதன் தற்போது எல்.ஐ.சி படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.