பாடகர் வேல்முருகனுக்கு விருதளித்த தருமபுரம் ஆதீனம்!
பாடகர் வேல்முருகனுக்கு தருமபுரி ஆதீனம் கிராமிய இசைக் கலாநிதி என்ற விருதை வழங்கியுள்ளது.
தமிழில் சுப்ரமண்யபுரம் படத்தின் மூலம் சினிமா பாடகராக அறிமுகமானார் வேல்முருகன். அதற்கு முன்பாக அவர் பல மேடைக் கச்சேரிகள் மற்றும் கோயில் விழாக்களில் பாடி பிரபலமானார். சினிமாவில் வரிசையாக நாட்டுப்புற பாடல்கள் பாடி கவனம் பெற்ற வேல்முருகனுக்கு தருமபுரி ஆதினம் கிராமிய இசை கலாநிதி என்ற விருதை வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் இந்த விருதை மூத்த பாடகரான ஜே கே ஜேசுதாஸ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.