வெள்ளை யானை படத்தின் ஒளிபரப்பு தேதியை அறிவித்த சன் டிவி!

Last Modified திங்கள், 5 ஜூலை 2021 (10:09 IST)

சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு நடித்துள்ள வெள்ளை யானை திரைப்படத்தின் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சுப்ரமண்யம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு ஆகியோர் இயக்கத்தில் தொடங்கப்பட்ட திரைப்படம் வெள்ளை யானை. முதலில் இந்த படத்தை தனுஷ்தான் தயாரித்து வந்தார். ஆனால் அதன் பிறகு இப்போது அவரின் மேலாளர் வினோத் தயாரிப்பதாக சொல்லப்படுகிறது. நீண்ட நாட்களாக உருவாக்கத்தில் இருந்த இந்த திரைப்படத்தின் டிரைலர் நேற்று இணையத்தில் வெளியாகியுள்ளது. விவசாயிகளின் அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள மற்றொரு படமாக இது இருக்கும் என்பது அதன் காட்சிகளில் தெரிகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் எப்போதோ முடிந்து விட்ட நிலையில் திரையரங்குகள் கட்டுபாடு காரணமாக ரிலீஸாகவில்லை. இந்நிலையில் இதை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்தது. ஆனால் இப்போது அந்த முடிவை மாற்றிக்கொண்டுள்ளனர். அது என்னவென்றால் முதலில் சன் தொலைக்காட்சியில் வெளியிட்டு அதன் பின்னர் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் ஜூலை 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு இந்த திரைப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக சன் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :