ஷூட்டிங்கின் போது கிரிக்கெட் விளையாடிய விஷால் !

sinoj| Last Modified புதன், 30 ஜூன் 2021 (23:38 IST)

விஷால் நடிப்பில் உருவாகிவரும் புதிய படப்பின் போது,படக்குழுவினர் கிரிக்கெட் விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

விஷால் நடிப்பில் அறிமுக இயக்குனர் சரவணன் என்பவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. விஷாலின் 31வது திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் மீண்டும் விஷால்-யுவன்சங்கர்ராஜா கூட்டணி இணைந்துள்ளனர். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

இதில் விஷாலுடன் டிம்பிள் ஹயாத்தி, யோகி பாபு மற்றும் ரவினா ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இன்று
இப்படத்தின் இடைவேளையின்போது, நடிகர் விஷால், யோகிபாபு உள்ளிட்ட படக்குழிவினர் கிரிக்கெட் விளையாடினர். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :