வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 5 ஜூன் 2017 (19:57 IST)

வேலைக்காரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.


 


 
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘வேலைக்காரன்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். முன்னணி மலையாள நடிகர்களுள் ஒருவரும், நடிகை நஸ்ரியாவின் கணவருமான  ஃபஹத் ஃபாசில், வில்லனாக நடிக்கிறார். பிரகாஷ் ராஜ், சினேகா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
 
24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார். சென்னை, சாலிகிராமம் பிரசாத்  லேப்பில் பெரிய செட் போட்டு இதன் படப்பிடிப்பு நடந்தது. அத்துடன், மலேசியாவிலும் சில காட்சிகளைப் படமாக்கினர். இந்நிலையில், தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.