செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (10:17 IST)

கதையை எழுதும் போது அழுதேன்… விஷால் பட இயக்குனர்!

வீரமே வாகைசூடும் படத்தின் இயக்குனர் து ப சரவணன் அந்த படம் பற்றி மிகவும் உணர்ச்சி பூர்வமாக பேசியுள்ளார்.

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள வீரமே வாகை சூடும் திரைப்படம் பிப்ரவரி நான்காம் தேதி ரிலீஸ் ஆகிறது. கொரோனா கட்டுப்பாடுகளால் தாமதமான இந்த படத்தின் ரிலீஸ் ஒரு வழியாக இப்போது உறுதியாகியுள்ளது. இந்த படத்தில் விஷால் ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். ஒரு சாதாரண மனிதன் எப்படி காணாமல் போன தனது குழந்தையை அசாதாரண சூழலில் தேடி கண்டுபிடிக்கிறான் என்பதே கதைக்களம்.

இந்த படத்தை முன்னாள் ஊடகவியலாளரான து ப சரவணன் இயக்கியுள்ளார். படம் பற்றி பேசியுள்ள அவர் ‘இது ஒரு கற்பனைக் கதை என்றாலும் உண்மைக்கு மிக நெருக்கத்தில் இருக்கும் படம். இந்த கதையை எழுதும்போதே அழுதுகொண்டுதான் எழுதினேன்’ எனக் கூறியுள்ளார்.