1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 31 ஜனவரி 2022 (15:54 IST)

அஜித் 61 படத்தில் நடிக்கிறாரா மோகன் லால்?

அஜித் 61 படத்தில் நடிக்க மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். வலிமை ரிலீஸுக்கு பின் இதற்கான வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் 2 ஆம் தேதி ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது படப்பிடிப்பு தொடங்குவது தாமதமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் திரைக்கதை பணிகள் மற்றும் செட் அமைக்கும் பணிகள் தாமதத்தால் தள்ளி வைக்கப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் அஜித்துடன் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான மோகன் லால் நடிக்க உள்ளதாக சில தினங்களாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. ஆனால் மோகன்லால் அந்த படத்தில் நடிக்கவில்லை என்பதே உண்மையான செய்தியாம். ஏனென்றால் மோகன்லால் தான் இயக்கும் படத்தில் பிஸியாக உள்ளதால் அஜித் 61 பட வாய்ப்பை ஏற்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.