அஜித் விஜய்தான் இதை நிறுத்தணும்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய யுவனின் சகோதரி!
தமிழ் சினிமாவில் பல படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருபவர் வாசுகி பாஸ்கர்.
சமூகவலைதளங்களில் அஜித் விஜய் ரசிகர்கள் அவ்வப்போது மோதிக் கொள்வது வாடிக்கை. இப்போது பீஸ்ட் படம் வெளியாகவுள்ளதை அடுத்து அந்த மோதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களாக டிவிட்டர் போர்க்களம் போல காட்சி அளித்து வருகிறது. இரு தரப்பினரும் மாறி மாறி ஹேஷ்டேக்குகளை உருவாக்கி எல்லை தாண்டி ஆபாசமாக ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இதையெல்லாம் பார்த்து கடுப்பான ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் இந்த மோசமான ஆபாச தாக்குதல்களை அஜித் விஜய் இருவரும் சொன்னால் மட்டும்தான் நிறுத்த முடியும் என தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.