ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 28 மார்ச் 2022 (09:39 IST)

ஹேப்பி நியூஸ் சொன்ன ஆல்யா மானசா… ரசிகர்கள் வாழ்த்து!

ஆல்யா மானசாவுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதை அவர் ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்.

ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் ஆலியா மானசாவுக்கு பதிலாக செம்பருத்தி ஷபானா நடிக்க இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல தொலைக்காட்சி நடிகர் சஞ்சீவ் மனைவியும் ராஜா ராணி  என்ற தொடரின் மூலம் புகழ் பெற்றவரான ஆலியா மானசா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார் 

அவருக்கு பிரசவ காலம் நெருங்கி வருவதை அடுத்து அவர் தற்காலிகமாக ராஜா-ராணி-சீரியல் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் இப்போது ரியா அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.  ரியா நடித்துள்ள புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

இதையடுத்து தற்போது ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதிகளுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதை அறிவித்துள்ளனர். மேலும் குழந்தைக்கு அர்ஷ் என்று பெயர் சூட்டிய்ளதாகவும் அறிவித்துள்ளனர்.