ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்… அஜித்தின் துணிவு படத்தைப் பாராட்டிய வசந்தபாலன்!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆன துணிவு திரைப்படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்றது. துணிவு திரைப்படம் நேற்று அதிகாலை 1 மணிக்கு தமிழகத்தில் வெளியானது. துள்ளலான அஜித் மற்றும் படத்தின் பரபர திரைக்கதை என ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
படத்தில் பேசப்பட்டுள்ள பொருளாதாரம் குறித்த கருத்துகள் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ரசிகர்கள் மட்டுமின்றி திரைக்கலைஞர்களும் இந்த படத்தைப் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குனர் வசந்தபாலன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் “துணிவு, மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு செய்தியுடன் விறுவிறுப்பான ஆக்சன் திரைப்படம். அஜீத் அவர்களின் கதாபாத்திர வடிவமைப்பும் வசனமும் திரையரங்கைக் களிப்பிற்குள்ளாக்குகிறது. பணம் சம்மந்தமாக இன்னொரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம். இயக்குநர் H.வினோத் உட்பட்ட மொத்த படக்குழுவிற்கும் என் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.