பொங்கலுக்கு வெளியாகிறது 'வாரிசு' : புதிய போஸ்டரை வெளியிட்டு உறுதி செய்த படக்குழு
விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் திடீரென இந்த படம் பொங்கலுக்கு வெளியாகாது என சமூக வலைதளங்களில் வதந்தி கிளம்பியது.
இந்நிலையில் 'வாரிசு' படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு பொங்கல் தினத்தில் 'வாரிசு' திரைப்படம் வெளியாவது உறுதி என்பதை தெரிவித்துள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஒரு காரின் மீது உட்கார்ந்துகொண்டு கையில் டீ கிளாஸ் வைத்திருப்பது போன்று இருக்கும் இந்த புதிய போஸ்டர் அட்டகாசமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
தற்போது வெளியாகிய போஸ்டரின் மூலம் வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்கள் பொங்கல் தினத்தில் மோத உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது.
Edited by Siva