ஆந்திரா & தெலங்கானாவில் வாரிசு ரிலீஸ் ஆவதில் தாமதம்?... ரசிகர்கள் அதிர்ச்சி!
வாரிசு திரைப்படம் தெலுங்கில் ஜனவரி 11 ஆம் தேதி வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் விஜய்யின் வாரிசு திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாரிசு திரைப்படமும் ஜனவரி 11 ஆம் தேதியே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2 நாட்கள் தாமதமாகதான் ரிலீஸ் ஆகும் என்று தற்போது சொல்லப்படுகிறது. தெலுங்கு பதிப்புக்கான பணிகள் முடியாததே இதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது.