வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 7 ஜனவரி 2023 (15:28 IST)

சிம்புதான் வள்ளிமயில் படத்தில் நடிக்க வேண்டியது… ஆனா? –இயக்குனர் சுசீந்திரன் பகிர்ந்த தகவல்!

இயக்குனர் சுசீந்திரன் தற்போது விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வள்ளிமயில் படத்தை இயக்கி வருகிறார்.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் வள்ளிமயில் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் பாரதிராஜா உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். 1980 கால கட்டங்களில் நடக்கும் கதையாக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு, மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப் பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் சமீபத்தில் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் “வள்ளிமயில் படத்தில் சிம்புதான் நடிக்க இருந்தார். கதையெல்லாம் அவருக்கு பிடித்திருந்தது. ஆனால் சம்பளம் மற்றும் பட்ஜெட் ஆகியவை ஒத்து வராததால் அவரால் நடிக்க முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.

சிம்பு சுசீந்தரன் கூட்டணியில் உருவான ஈஸ்வரன் திரைப்படம் சரியாக போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.