திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 23 டிசம்பர் 2022 (08:31 IST)

வாரிசு ஆடியோ வெளியீட்டில் அது இருக்காது... ரசிகர்களுக்கு ஏமாற்றம்

வாரிசு படத்தின் ஆடியோ வெளியீடு வரும் டிசம்பர் 24 ஆம் தேதி நடக்க உள்ளது.

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. 

இதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கில்  பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ளவும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டிசம்பர் 31 ஆம் தேதிதான் டிரைலர் வெளியாகும் என சொல்லப்படுகிறது.