திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : புதன், 21 டிசம்பர் 2022 (20:22 IST)

பதான் படத்தை திரையிடும் தியேட்டர்களை கொளுத்துவோம்: சாமியார் ஆவேசம்

pathan
ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படத்தை திரையிடும் திரையரங்குகளை கொளுத்துவோம் என சாமியார் ஒருவர் ஆவேசமாக பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஷாருக்கான் தீபிகா படுகோனே நடித்த பதான்  படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் தீபிகா படுகோனே காவி நிறத்தில் உடை அணிந்து ஆபாசமாக காட்சியளித்தார். தற்கு பாஜக உள்பட ஒரு சிலர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் சாமியார் ஜகத்குரு பரமாச்சாரியார் என்பவர் இது குறித்து ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். பதான்  திரைப்படத்தை வெளியிடும் திரையரங்குகளை கொள்ளுத்துவோம் என்றும், ஷாருக்கானை நேரில் பார்த்தால் உயிரோடு எரித்துக் கொன்று விடுவேன் என்றும் கூறியுள்ளார் 
 
மேலும் காவியை களங்கப்படுத்தி பணம் சம்பாதிக்கும் ஷாருக்கானுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva