வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 6 ஜனவரி 2023 (09:41 IST)

வாரிசு படத்தில் பணியாற்றிய கலைஞர் திடீர் மரணம்!

வாரிசு படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளர் சுனில் பாபு மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தியுள்ளார்.

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரித்துள்ள வாரிசு திரைப்படம் ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ் ராஜ் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் குடும்ப படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் கலை இயக்குனராக சுனில் பாபு பணியாற்றியுள்ளார்.

பல தென்னிந்திய மொழிப் படங்களில் பணியாற்றியுள்ள சுனில் பாபு நேற்று மாரடைப்பு காரணமாக எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிகக்ப்பட்டு சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி இரவு 11 மணியளவில் இயற்கை எய்தியுள்ளார். அவரது மறைவு திரையுலகில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.