1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 29 செப்டம்பர் 2018 (13:59 IST)

அம்மாவ குடிக்க வச்சு கெடுத்ததே எங்க அப்பாதான் - வனிதா விஜயகுமார் பேட்டி

சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள விஜயகுமாரின் வீட்டை ஷூட்டிங்குக்காக வாடகைக்கு வாங்கிய வனிதா, ஆக்கிரமித்துக் கொண்டதாக புகார் எழுந்தது. 

 
இந்த விவகாரத்தில் மகள்  வனிதா மீது விஜயகுமார் போலீசில் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் விஜயகுமார், அருண் விஜய், மற்றும் சகோதரியின் தங்கை, ஹரி ஆகியோர் மீது வனிதா ஏற்கனவே பரபரப்பு குற்றம் சாட்டியிருந்தார்.
 
இந்நிலையில், ஒரு பிரபல வார இதழுக்கு பேட்டியளித்த வனிதா விஜயகுமார் “ எங்க அப்பா விஜயகுமார் என் அம்மா மஞ்சுளாவை மிகவும் கொடுமை படுத்தியுள்ளார். அதனால்தான் என் அம்மாவின் உடல்நிலை மோசமானது. மேலும், அம்மாவுக்கு குடிப்பழக்கத்தை கற்றுக்கொடுத்ததே என் அப்பாதான். நான் இருப்பது என் அம்மாவின் சொத்து. இந்த வீட்டை விட்டு எங்கும் செல்ல மாட்டேன். எல்லோரையும் நான் சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன்” என அவர் கூறியுள்ளார்.