1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 10 ஜூன் 2021 (07:13 IST)

நான்காவது முறையாக திருமணமா? வனிதா விஜயகுமார் விளக்கம்

நடிகை வனிதா விஜயகுமாருக்கு ஏற்கனவே 3 முறை திருமணம் நடந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது நான்காவது முறையாக ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் பரவி வருகிறது இந்த வதந்திக்கு வனிதா விஜயகுமார் 
 
இதுகுறித்து வனிதா விஜயகுமார் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது ’எனக்கு திருமணம் நடந்ததாக பரவி வரும் செய்தியில் உண்மையில்லை, தயவுசெய்து வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் நான் தற்போது சிங்கிள் மட்டும் அவைலபிள்என்று பதிவு செய்துள்ளார்
 
வனிதா விஜயகுமார் ஏற்கனவே ஆகாஷ், ஆனந்தராஜன் ஆகிய இருவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் வனிதாவுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நான்காவதாக பைலட் ஒருவரை கொல்கத்தாவில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பரவி வரும் வதந்தியை அடுத்து வனிதா விஜயகுமார் தற்போது டுவிட்டரில் விளக்கமளித்துள்ளார். மேலும் அவர் தனது ட்வீட்டில் சிங்கிள் என்று கூறியிருப்பது மட்டுமின்றி அவைலபில் என்று கூறியிருப்பதால் நான்காவது திருமணத்திற்கு அவர் தயாராக இருப்பதாகவும் தெரிகிறது.