புதன், 4 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 28 ஜூலை 2020 (10:12 IST)

சோல்மேட்டை கண்டுபிடிக்க உதவிய கொரோனா... வனிதாவுக்கு ரணகளத்துலயும் ஒரு குதூகலம்!

வனிதா - பீட்டர் பால் விவகாரம் கடந்த ஒரு மாதங்களாக பெரிய பூதாகரமாக வெடித்தது. விவாகரத்து செய்யாத பீட்டர் பாலை திருமணம் செய்த வனிதாவுக்கு சூரிய தேவி, லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி என பலரும் எதிர்த்து சர்ச்சைகளில் சிக்கினர்.

இந்நிலையில் சூர்யா தேவிக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் தெரியவந்ததுடன் அவரிடம் விசாரணை  நடத்திய பெண் போலீசுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து வனிதா அக்கா ரசிகர்கள் சூர்யா தேவிக்கு தொற்று ஏற்பட்டு கொரோனவும் உங்களுக்கு பாதுகாப்பு தருகிறது என கூறி மீம்ஸ் போட்டனர்.

அதற்கு ட்விட்டரில் பதிலளித்த வனிதா, " இந்த நேரத்தில் சிரிக்கக் கூடாது தான் ஆனாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. இதை சொல்லியே ஆகனும், கொரோனா என்னிடம் அன்பாக உள்ளது. அது தான் என் சோல்மேட்டை கண்டுபிடிக்க உதவியது, அத்துடன் என் சேனல் பெரிய அளவில் வெற்றி பெறச் செய்தது. எனவே, கொரோனாவுக்கும் என்னை பிடித்திருக்கிறது என்று நக்கலாக கூறி சிரித்தார். இதனை கண்ட இணையவாசிகள் அவனவன் நோய் வந்துட்டு உயிருக்கு போராடிட்டு இருக்கிறான்.. வனிதாவுக்கு குதூகலத்தை பார்த்தியா..? என கிண்டல் செய்து வருகின்றனர்.