திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 27 ஜூன் 2020 (16:11 IST)

அட இப்படி யாரும் பண்ணினதில்லப்பா... திருமணத்திற்கு முன் லைவ் வீடியோ வெளியிட்ட வனிதா!

விஜய் நடித்த சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அதன் பின்னர் ஒருசில படங்களில் மட்டும் நடித்த வனிதா விஜயகுமார் சமீபத்தில் நடைபெற்ற பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகழ்பெற்றார்.

இந்த நிலையில் அவ்வப்போது அவர் சமையல் நிகழ்ச்சி உள்பட பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இடம்பெற்று கொண்டிருக்கிறார். இரண்டு திருமணம் செய்து மூன்று குழந்தைகளுக்கு தாயான வனிதாவிற்கு இன்று மூன்றாவது திருமணம் நடக்கவுள்ளது.

 பீட்டர் பால் என்பவரை இன்று ஜூன் 27ம் தேதி மாலை 4 மணிக்கு தனது வீட்டில் தனது திருமணம் செய்யவுள்ளார். இந்நிலையில் திருமணத்திற்கு தானே மேக்கப் போடுவதை விவரித்து யூடியூப் லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தன் மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்ட வனிதாவுக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.