செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 24 ஜூன் 2020 (16:38 IST)

வருங்கால கணவருடன் போஸ் கொடுத்த வனிதா ... முதன்முறையாக வெளியிட்ட புகைப்படம்..!

விஜய் நடித்த சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அதன் பின்னர் ஒருசில படங்களில் மட்டும் நடித்த வனிதா விஜயகுமார் சமீபத்தில் நடைபெற்ற பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகழ்பெற்றார். இந்த நிலையில் அவ்வப்போது அவர் சமையல் நிகழ்ச்சி உள்பட பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இடம்பெற்று கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இரண்டு திருமணம் செய்து மூன்று குழந்தைகளுக்கு தாயான வனிதாவிற்கு மூன்றாவது திருமணம் நடக்கவுள்ளது. பீட்டர் பால் என்பவரை வரும் 27ம் தேதி மாலை 4 மணிக்கு தனது வீட்டில் தனது திருமணம் செய்யவுள்ளார். அவரது திருமண பத்திரிக்கை அண்மையில் இணையத்தில் வெளியாகி செம வைரலானது.

இந்நிலையில்  இருவரும் திருமண வேலைகள் மற்றும் திருமண அழைப்பு விடுதல் உள்ளிட்டவற்றில் பிசியாக இருந்து வருகின்றனர். தற்ப்போது வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருங்கால கணவர் பீட்டர் பாலுடன் காரில் எடுத்துக்கொண்ட செல்பி போட்டோவை வெளியிட்டுள்ளார். முதன்முறையாக இந்த ஜோடியை ஒன்றாக சேர்த்து பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Kancheepuram collectorate...invitation for passes

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on