வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து அவரது மகள் உணர்ச்சிப்பூர்வ பதிவு!
விஜய் நடித்த சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அதன் பின்னர் ஒருசில படங்களில் மட்டும் நடித்த வனிதா விஜயகுமார் சமீபத்தில் நடைபெற்ற பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகழ்பெற்றார். இந்த நிலையில் அவ்வப்போது அவர் சமையல் நிகழ்ச்சி உள்பட பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இடம்பெற்று கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இரண்டு திருமணம் செய்து மூன்று குழந்தைகளுக்கு தாயான வனிதாவிற்கு மூன்றாவது திருமணம் நடக்கவுள்ளது. பீட்டர் பால் என்பவரை வரும் 27ம் தேதி மாலை 4 மணிக்கு தனது வீட்டில் தனது திருமணம் செய்யவுள்ளார். அவரது திருமண பத்திரிக்கை அண்மையில் இணையத்தில் வெளியாகி செம வைரலானது.
இந்நிலையில் வனிதாவின் மூத்த மகள் அம்மா மூன்றாவது திருமணம் செய்துகொள்ளப்போவது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். என்ன நடந்தாலும் நான் உங்களுக்கு சப்போர்ட்டாக இருப்பேன். நான் எல்லாவற்றையும் உங்களிடம் இருந்துதான் கற்றுக் கொண்டு இருக்கிறேன். உங்களுடன் இருக்கும் 15 ஆண்டுகளும் தீரம்மிக்கது.
வாழ்க்கையில் பலவற்றை சேர்ந்து பார்த்திருக்கிறோம்.இன்னும் பல ஆண்டுகள் போன்றுதான் வர போகிறது என்பது எனக்கு தெரியும். உங்களை எனக்கு தெரிந்த அளவுக்கு வேறு யாருக்கும் தெரியாது. நீங்கள் அன்பான மனிதர். நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழ வேண்டும், அதில் எந்த தவறும் இல்லை.ஐ லவ் யூ, நான் 10000% உங்களுக்கு சப்போர்ட்டாக இருக்கிறேன். என்ன நடந்தாலும் பரவாயில்லை, யார் என்ன பேசினாலும் பரவாயில்லை, ஏனெனில் எனக்கு உங்களைப்பற்றி தெரியும். நீங்கள் ஒரு கடின உழைப்பாளி, நேர்மையானவர், அருமையானவர், உற்சாகப்படுத்தக்கூடியவர், இரக்கமானவர், அன்பானவர்.. அதை மறந்துவிடாதீர்கள்.
அனைவரையும் போல நீங்களும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ தகுதியுள்ளவர். எல்லோருக்கும் நம்பிக்கை இருப்பதில்லை. எல்லோருக்கும் மேஜிக்கில் நம்பிக்கை இருப்பதில்லை. எல்லோருக்கும் காதலிலும் நம்பிக்கை இருப்பதில்லை. ஆனால் உங்களுக்கு இருந்தது, அதற்கான பலன் கிடைத்துள்ளது. இதை உங்களின் மகளாகவும் தோழியாகவும் சொல்கிறேன். ஐ லவ் யூ... ஆல் த பெஸ்ட் மா..என்று மிகவும் உணர்ச்சிபூர்வமாக அம்மாவின் புது வாழ்க்கைக்கு ஆதரவு கொடுத்து வாழ்த்தியுள்ளார் மகள் ஜோவிகா.