வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 26 ஜனவரி 2022 (19:30 IST)

சினேகன், ஜூலியை அடுத்து பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர் அறிவிப்பு!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி வரும் 30ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பு தினந்தோறும் வெளியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில்ஏற்கனவே சினேகன் மற்றும் ஜூலி கலந்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வனிதா விஜயகுமார் இந்த நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதுகுறித்த வீடியோவையும் ஹாட்ஸ்டார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வனிதா, ஜூலி, சினேகனை அடுத்து இந்த நிகழ்ச்சியில் தாமரைச்செல்வி உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது