1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 30 மே 2021 (10:07 IST)

விஜய்யின் அடுத்த படத்தை நான் தான் இயக்குகிறேன்: பிரபல இயக்குனர் பேட்டி!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல் கடந்த சில நாட்களாக இணையதளங்களில் வைரலாகி வந்தது என்பது தெரிந்ததே
 
விஜய்யின் அடுத்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க இருப்பதாகவும் அந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்த ஹேஷ்டேக் சமீபத்தில் டுவிட்டரில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவதை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து தெலுங்கு ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் விஜய்யிடம் நான் கூறிய கதை அவருக்கு பிடித்து விட்டதாகவும் தில் ராஜ் தயாரிப்பில் இந்த படத்தை நான் தான் இயக்க இருக்கிறேன் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு முடிவடைந்ததும் தயாரிப்பாளர் வெளியிடுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்
 
இந்த படத்தின் மேலும் சில விஷயங்களை சஸ்பென்ஸ் அக வைத்திருப்பதாகவும், அந்த சஸ்பென்ஸ் உடையும்போது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். எனவே இந்த பேட்டியிலிருந்து தளபதி விஜய்யின் அடுத்த படத்தை வம்சி பைடிபல்லி இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.