அஜித் படங்களிலேயே வலிமைதான் உச்சம்… உற்சாகத்தில் ரசிகர்கள்!
வலிமை திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாக உள்ள நிலையில் இதுவரை அஜித் படங்கள் படைக்காத சாதனையை படைக்க உள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாக உள்ளது. கடைசியாக அஜித்தின் நேர்கொண்ட பார்வை வெளியாகி இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் வெளியாகிறது. இந்த படத்தின் மீது மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் இந்த படம் தமிழகத்தில் மட்டும் 800 திரைகளில் 5 காட்சிகள் திரையிடப் பட உள்ளது. இதுவரை அஜித் படங்களிலேயே அதிகபட்ச எண்ணிக்கை இதுதான். கடைசியாக விஸ்வாசம் படத்துக்கு அதிகபட்சமாக 520 திரைகள் ஒதுக்கப்பட்டதே அதிகபட்ச சாதனையாக இருந்தது.