வேற மாறி ஒப்பனிங் சாங் லோடிங்... வலிமை அப்டேட்!!
வலிமை படத்தின் ஓப்பனிங் சாங் பாடல் படப்பிடிப்பு புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.
ஆனால் படம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் படத்தின் டைட்டில் போஸ்டர் கூட இன்னும் படத்தயாரிப்பாளரால் வெளியிடப்படவில்லை. இது அஜித் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வரும் நிலையில் படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியது.
ஆம், படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, வலிமை படத்தில் ஓப்பனிங் பாடலுக்கு விக்னேஷ் சிவன் பாடல் வரிகளை எழுதியுள்ளார் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் வலிமை படத்தின் ஓப்பனிங் சாங் பாடல் படப்பிடிப்பு புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் இசையமைப்பாளர் யுவனோடு, விக்னேஷ் சிவனும் இருக்கிறார். இதனை தல ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.