புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 13 நவம்பர் 2021 (10:58 IST)

வலிமை தமிழில் ரிலீஸ் ஆகும் அதே நாளில் இந்தியிலும்… போனி கபூரின் முயற்சி!

வலிமை படத்தின் தமிழக வியாபார விவகாரங்கள் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.  பொங்கல் பண்டிகைக்கு வலிமை படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் தமிழக திரையரங்க விநியோக உரிமையை முன்னணி விநியோகஸ்தரான மதுரை அன்புச்செழியன் அதிக தொகைக் கொடுத்து வாங்கியுள்ளார்.இந்நிலையில் அவரிடம் இருந்து மொத்தமாக அந்த உரிமையை வாங்க உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட்ஸ் மூவீஸ் நிறுவனம் ஆர்வமாக இருக்கிறதாம்.

இந்நிலையில் படத்தை தமிழில் ரிலிஸ் ஆகும் அதே நாளில் தெலுங்கிலும் இந்தியிலும் ரிலீஸ் செய்யவும் இப்போது பணிகள் நடந்துவருகிறதாம். இந்தியில் முன்னணி தயாரிப்பாளராக போனி கபூர் இருப்பதால் இந்தியில் வலிமையை ரிலீஸ் செய்ய அவர் முயற்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.