செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 7 அக்டோபர் 2020 (10:31 IST)

இருப்பவர் யார் என கொரோனா முடிந்த பிறகு கணக்கு போடலாம்: வைரமுத்து

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், 50க்கும் மேற்பட்டோர் பலியாகியும் வருகின்றனர் 
 
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் போக மீதம் இருப்பவர்கள் குறித்த கவிதை ஒன்றை கவிஞர் வைரமுத்து அவர்கள் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது 
 
பருந்தடித்துப் போன பிறகு
குஞ்சுகளைக் கணக்குப் பார்க்கும்
தாய்க் கோழி போல – 
 
இருப்பவர்கள் யார் – இருந்த இடத்தில்
இருப்பவர்கள் யார் என்று
கொரோனா முடிந்த பிறகு
கணக்குப் பார்க்கும் காலம்.
 
கட்டுப்பாடு காப்போம்;
நாமிருப்போம் என்று நம்புவோம்
 
இந்த கவிதைத் கொரோனாவுக்கு மட்டுமின்றி தற்போது அதிமுகவில் நடை பெற்று வரும் முதல்வர் வேட்பாளர் கொடுத்த சர்ச்சையையும் குறிப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது