செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 14 பிப்ரவரி 2022 (15:59 IST)

கெளதம் மேனன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் வடிவேலு!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் கெளதம் மேனன் , நடிகர் வடிவேலுவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

ஒரு பத்து வருட காலம் இடைவேளைக்குப் பிறகு நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் ‘’நாய் சேகர் ரிட்டன்ஸ்’’ என்ற படத்தில் சுராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இ ந் நிலையில், நெட்பிளிக்ஸ் தளத்தின் யூடியூப் தளத்த்ல் இயக்கு நர் கெளதம் மேனன் ஒரு பேட்டியளித்துள்ளார். அதில்,     நடிகர் வடிவேலுவை வைத்து ஒரு நகைச்சுவைப்படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தையில் இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணிபுரிந்து  இயக்குநர்  கெளதம் மேனன் தற்போது நடிகர் வடிவேலுவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக கூறியுள்ளது சினிமா வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.