புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 1 நவம்பர் 2024 (15:48 IST)

பஹத் பாசில் &வடிவேலு நடிக்கும் ‘மாரிசன்’ படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் என்ற திரைப்படத்தில் பகத் பாஸில் மற்றும் வடிவேலு இணைந்து நடித்தனர் என்பதும் அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதற்கு வடிவேலு பஹத் காம்போவும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.

இதனை அடுத்து மீண்டும் பகத் பாஸில் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் படத்தின் மாரீசன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் தற்போது படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

போஸ்டரில் வடிவேலு மற்றும் பஹத் ஆகியோர் இரு சக்கரவாகனத்தில் மகிழ்ச்சியோடு செல்வது போல வடிவமைத்துள்ளனர். ஏற்கனவே இந்த படம் பயணத்தைப் பற்றிய ஒரு பீல்குட் படம் என சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.