1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 23 ஜனவரி 2023 (18:07 IST)

சந்தானம் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு: கவுண்டமணியின் காமெடி வசனமா?

santhanam
சந்தானம் நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 
சந்தனம் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ’வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற கவுண்டமணியின் பிரபலமான ஜோக் டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது. 
 
இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்க இருக்கும் நிலையில் சீன் ரோல்டன் இசையமைக்க உள்ளார். 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் இவ்வருட இறுதியில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய  திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
 
Edited by Siva