புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 9 அக்டோபர் 2018 (20:45 IST)

வடசென்னை' படத்தை பார்க்க குழந்தைகளுக்கு அனுமதி இல்லை! ஏன் தெரியுமா?

தனுஷின் ரசிகர்கள் பெரும்பாலும் பள்ளி படிக்கும் மாணவர்களாகத்தான் இருப்பார்கள். தனுஷின் ரசிகர் மன்ற தலைவர்களும், உறுப்பினர்களும் கூட பெரும்பாலும் டீன் ஏஜ் உள்ளவர்களாக இருப்பதுண்டு. இந்த நிலையில் தனுஷ் நடித்த 'வடசென்னை' படத்தை 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆம், தனுஷ் நடித்த 'வடசென்னை திரைப்படம் இன்று சென்சார் ஆன நிலையில் இந்த படத்திற்கு படக்குழுவினர் 'ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். இந்த படத்தின் வன்முறை காட்சிகள் சிலவற்றை சென்சார் சென்சார் அதிகாரிகள் நீக்க கூறியதாகவும், ஆனால் படக்குழுவினர் மறுத்துவிட்டதால் இந்த படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமிர், டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், ராதாரவி,  உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, வெங்கடேஷ் எடிட்டிங் செய்துள்ளார். தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.