நெகட்டிவ் விமர்சனங்களை எதிர்கொள்ளும் தனுஷின் வாத்தி!
தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் இன்று காலை ரிலீஸ் ஆகியுள்ளது.
தனுஷ் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெள்ளிக்கிழமை அன்று வெளியாக உள்ள படம் வாத்தி. இந்த படம் தமிழில் வாத்தி என்ற பெயரிலும், தெலுங்கில் சார் என்ற பெயரிலும் இன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் சிறப்புக் காட்சி பார்த்த ரசிகர்கள் படம் பற்றி நெகட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். தொய்வான திரைக்கதை மற்றும் கிளிஷேவான காட்சிகள் என ரசிகர்களின் பொறுமையை சோதிப்பதாகவும் பலரும் பொங்கி எழுந்துள்ளனர்.
தனுஷின் முதல் நேரடிப் படம் நெகட்டிவ்வான விமர்சனங்களோடு வெளியாகி இருப்பது அவர் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.