சூர்யா & கார்த்திக் சுப்பராஜ் படத்தில் இவர்தான் வில்லனா?
சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். ஷூட்டிங் ஜூன் மாதம் அந்தமான் தீவுகளில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்லது. இவர் ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜோடு ஜகமே தந்திரம், மகான் ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார். இதோடு கலை இயக்குனராக ஜாக்கியும், படத்தொகுப்பாளராக ஷஃபீக் முகமது அலியும், ஸ்டண்ட் இயக்குனராக கெச்சா காம்பக்தேயும், காஸ்ட்யூம் டிசைனராக ப்ரவீன் ராஜாவும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.
இந்நிலையில் படத்தில் வில்லனாக நடிக்க உறியடி விஜயகுமாரை ஒப்பந்தம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் விஜயகுமார் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க சம்மதம் சொல்லி இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.