திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 27 செப்டம்பர் 2023 (19:07 IST)

விஜய்யின் 'லியோ' 2 வது சிங்கில் பற்றிய அப்டேட்

leo vijay
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்  விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் லியோ.  இப்படத்தை லலித்குமார் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.  இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில்,  படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி செப்டம்பர் 30 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடக்கவிருந்த  நிலையில்,  இசை வெளியீட்டு விழாவை நடத்தப் போவதில்லை என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

இந்த  நிலையில்,  ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் வகையில், லியோ பட   2 வது சிங்கில் ரிலீஸ் தேதி   நாளை ரிலீஸாகும்  என்று தயாரிப்பாளர் அறிவித்து, புதிய போஸ்டரை  பகிர்ந்துள்ளார்.

கத்தியுடன் விஜய் நிற்கும் இந்த போஸ்டர்  வைரலாகி வருகிறது.