செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 24 மார்ச் 2018 (22:04 IST)

மறைந்த ஸ்ரீதேவியின் நிறைவேறாத ஆசை; பிரபல நடிகை பேட்டி!

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், பாவிவுட் சினிமாவிலும் கொடிகட்டி பறந்தவர் மரைந்த நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி எதிர்பாராத வகையில் துபாயில் குளியல் தொட்டியில் மூழ்கியதால் மரணம் அடந்தார்.
ஸ்ரீதேவியின் இறப்பிற்கு பின் நிறைய பிரபலங்கள் ஸ்ரீதேவியுடனான தங்களது உறவு பற்றி பேசிவருகின்றனர். அப்படி ஹிச்கி (Hichki) என்ற படம் மூலம்  ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கும் ராணி முகர்ஜி ஒரு பேட்டி ஒன்றில் கூறுகையில், ஸ்ரீதேவி எனக்கு மிகவும் நெருக்கமானவர், சாந்தினி(Chandni),  லாம்ஹே(Lamhe) போன்று அவருடைய படங்களை பார்த்து தான் நான் வளர்ந்தேன். அவருடைய மரணம் எனக்கு பெரிய இழப்புதான். என் மகள் ஆதிரா  பிறந்த பிறகு அவருடன் மிகவும் நெருக்கமானேன், தாய்மை பற்றி அவர் எனக்கு நிறைய கூறியுள்ளார். கடந்த 2 மாதத்தில் ஸ்ரீதேவி, என் அம்மா என  வாழ்க்கையில் இரண்டு முக்கிய நபர்களை இழந்துவிட்டேன்.
இந்நிலையில் அவர் இறப்பதற்கு பதினைந்து நாட்கள் முன் எனக்கு அவர் போன் செய்திருந்தார். அப்போது, ஹிச்கி (Hichki) படத்தை பார்க்க வேண்டும்  என்று கூறியிருந்தார். நானும் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்றும், உங்களுடைய கருத்து எனக்கு மிகவும் முக்கியம் என்றும் கூறியிருந்தேன், ஆனால்  அது முடியாமல் போய்விட்டது என தனது வருத்தத்தை வெளிபடுத்தியுள்ளார்.