1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2022 (08:59 IST)

பொன்னியின் செல்வன் திரைப்படத்தையும் வெளியிடுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

இயக்குனர் மணிரத்னம் உருவாக்கி வரும் அவரின் கனவுப்படைப்பான பொன்னியின் செல்வன் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று  முடிந்துவிட்டது. இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் முதல்பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் இப்போது செப்டம்பர் 30 ஆம் தேதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் டீசர் வரும் ஜூன் மாதம் சென்னையில் பிரம்மாண்டமான விழாவில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் லைகா தயாரித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட ‘டான்’ படத்தின் 25 ஆவது நாள் வெற்றிவிழாவில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பற்றி பேசியுள்ளார். அவரது பேச்சில் “ லைகா தமிழ்க்குமரன், என்னிடம் பொன்னியின் செல்வன் தயாராகிடுச்சு…. எப்போ பாக்குறீங்க எனக் கேட்டார். நான் விரைவில் பார்க்கிறேன் என சொல்லி இருக்கிறேன்” எனப் பேசியுள்ளார். வரிசையாக பெரிய படங்களை வாங்கி வெளியிட்டு வரும் உதயநிதியின் இந்த பேச்சால் அவரே பொன்னியின் செல்வன் திரைப்படத்தையும் வெளியிடுவாரோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.